ஊழல் செய்பவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள்- அமித்ஷா

sinoj
திங்கள், 1 ஏப்ரல் 2024 (18:22 IST)
எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பிரதமராக மோடி தான் வருர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்த நிலையில்,  பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக, பாமக உள்ளிட்ட கட்சியினர் இணைந்துள்ளனர். சமீபத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியானது.
 
பாஜக தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என கேள்வி எழுந்த  நிலையில், மக்களவை  தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட குழு அமைத்துள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி.  நட்டா அறிவித்தார்.
 
இந்த  நிலையில், ராஜஸ்தான் ஜோத்பூர் பேரணியின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
 
ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு ராகுல் காந்திக்கு எந்த தகுதியும் இல்லை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சி காலத்தில் லட்சக்கணக்கான மக்களை சிறையில் அடைத்து, அரசியல் கட்சிகளுக்குத் தடை விதித்தார். 3 வது முறையாக பிரதமர் மோடி நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தால் உலகின் 3 வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஊழல் செய்பவர்கள்  சிறையில் தள்ளப்படுவார்கள். எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பிரதமராக மோடி வருவார். மக்களுக்காக நிறைய திட்டங்களை வகுத்துள்ளோம். பிரதமர் மோடியின் பணிகளை பாஜகவினர் கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்