கொரோனா பாதிப்பு அபாயம்: 17வது இடம் பிடித்த இந்தியா!

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (17:37 IST)
கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கும் நாடுகளில் இந்தியா 17வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 
 
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
 
கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்க முடியாமல் சீன அரசு திணறி வருகிறது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சீனாவுக்கு வெளியே தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் உள்பட 20 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும், அதில் இந்தியா 17வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இந்தியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்