சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் பிரபல ஹாஸ்பிட்டல் இன் பெக்சன் என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் சராசரியாக 4 - 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும்.
குறைந்த வெப்ப நிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும். கொரோனா காற்றிலோ, தரையிலோ 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.