தெலுங்கானா மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று !

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (23:50 IST)
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அவருக்கு இருந்ததால் அவரை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், டெல்லி, மஹராஷ்டிரா, தமிழ்நாடு, உள்ளிட்ட மாநிலங்கள் அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது.

கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாம் கட்ட அலை மக்களை அதிகளவில் பாதித்துவருகிறது.

இத்தொற்றைத் தடுக்க அரசு ப விழிப்புணர்வு பிரசாரம், தடுப்பூசித் திட்டம் எனப் பல்வேறு நடவடிகைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை மருத்துவர்கள் குழு கண்கணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்