22 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! இந்திய நிலவரம்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (10:48 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புகளால் 1,007 பேர் பலியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக நாள் ஒன்றிற்கான பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 62,064 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,15,075 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,007 பேர் பலியாகியுள்ளதால் மொத்த இறப்பு எண்ணிக்கை 44,386 ஆக உயர்ந்துள்ள நிலையில் இதுவரை 15,35,744 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளனர். 6,34,945 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்