கொரோனா எதிர்ப்பு சக்தி மூன்று மாதங்களுக்கு மட்டுமே- ஐஎம்சிஆர் அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (10:05 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி 3 முதல்  5 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும் என ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது இந்தியாவில் குறைந்து வருகிறது. இதனால் மக்கள் சற்று பதற்றம் குறைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களே மீண்டும் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் ஏற்பட்டு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி 3 முதல் 5 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும் எனவும் மீண்டும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்