ஒரே நாளில் 54,044 பேர் பாதிப்பு: இந்திய கொரோனா நிலவரம்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (10:00 IST)
உலகம் முழுவதும் 4 கோடி பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 54 ஆயிரத்து 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 76,51,108 என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 67,95,103 என்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,15,914 என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸிடம் இருந்து இந்திய மக்களை காப்பாற்ற மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் தினமும் 50 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்