நோட்டாவிற்கு தீவிர பிரசாரம் செய்யும் தொகுதி மீட்புக் குழு

Sinoj
சனி, 6 ஏப்ரல் 2024 (16:58 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், புதுக்கோட்டை மீட்புக் குழு மீண்டும் களமிறங்கியுள்ளது.
 
கடந்த 2009 ஆம் ஆண்டு பாரம்பரியமிக்க புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுப்பதற்க்கு என தொகுதி மீட்புக் குழு தொடங்கப்பட்டது.
 
இந்தக் குழு 2009 ஆம் ஆண்டு மிக தீவிரமான பிரசாரம் மேற்கொண்டதன் செய்து, 2009 ஆம் ஆண்டு தேர்தலில் நோட்டாவிற்கு 15 ஆயிரம் வாக்குகள் விழுந்தது.
 
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 51 ஆயிரம் வாக்குகளும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 43 ஆயிரம் வாக்குகளும் தொகுதி மீட்புக் குழு பிரசாரம் மூலம் நோட்டாவிற்கு விழுந்தன.
 
இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தலிலும் நோட்டாவிற்கு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர் புதுக்கோட்டை தொகுதி மீட்புக் குழு.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்