ஆட்சி கவிழ்ந்து, 15 நாட்களில் ஆட்சி மாற்றம்?

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (21:53 IST)
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால், காங்கிரஸ் - மஜக கூட்டணி அமைத்து, குமராசாமி முதலமைச்சாராக பதவியேற்று ஆட்சி செய்து வருகிறார். 
 
இந்நிலையில் சமீபத்தில் சித்தராமையா மீண்டும் நான் முதல்வராவேன் என பேட்டி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதோடு குமாரசாமி தலைமையில் நடக்கும் ஆட்சி எப்போது வேண்டுமாலும் கவிழும் என தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பாஜக எம்.பி.
 
பாஜக எம்.பி. சுரேஷ் அங்கடி கூறியது பின்வருமாறு, கட்டாயப்படுத்தி நடத்தப்படும் திருமணம், நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. எனவே, சித்தராமையா தனது காலைவாரும் பணியை துவங்கிவிட்டார். 
 
கடந்த காலத்தில் தேவகவுடா பிரதமராக இருந்த போது இப்படிதான் கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகியது. அதேபோல் தற்போது, குமாரமிக்கும் காங்கிரஸ் துரோகம் செய்ய உள்ளது. 
 
எனவே, கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி இன்னும் 15 நாட்களில் கலைவதில் சந்தேகம் இல்லை. அதன் பிறகு கர்நாடகாவில் புதிய ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்