காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம்: மக்களவை செயலாளர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (14:32 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலாளர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் நீரவ் மோடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார். இது குறித்து பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

இதனை அடுத்து ராகுல் காந்தி தரப்பிலிருந்து ஜாமீன் பெற்றதாகவும் மேல்முறையீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது . இதனால் ராகு ல் காந்தியின் எம்பி பதவிக்கு ஆபத்து என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலாளர் அறிவித்துள்ளார். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆடுகள் சிறை தண்டனை விரித்துள்ளதால் இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மக்களவைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்