இன்னொரு பொய் அம்பலம்.. பாகிஸ்தான் தாக்கியதாக சொன்ன இடத்திற்கே சென்ற மோடி..!

Siva

செவ்வாய், 13 மே 2025 (15:13 IST)
இந்தியாவில் உள்ள  விமானப்படைத்தளத்தை தாக்கிவிட்டதாக பாகிஸ்தான் அண்மையில் வெளியிட்ட கூற்றுகள் பொய்யானவை என பிரதமர் மோடியின் இன்று செய்த பயணம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
பஞ்சாபில் உள்ள அதம்பூர் விமானப்படை தளத்திற்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொண்டார். அங்கு விமானப்படை தலைவர்கள் மற்றும் வீரர்களுடன் அவர் நேரில் சந்தித்து பேசினார். இந்த தளத்தை தான் பாகிஸ்தான் தாக்கியது என்றும் அழித்துவிட்டோம் என்றும் அவர்கள் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தனர்.
 
ஆனால், இன்று அந்த தளத்தில் எந்தவித சேதமும் இல்லாதது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் வெளியிட்ட தகவல்கள் முழுமையாக பொய்யெனவும், அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது உறுதியெனவும் தெளிவாகியுள்ளது.
 
மேலும், இந்தியாவின் எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அழித்துவிட்டோம் என பாகிஸ்தான் கூறிய நிலையில், அதே பின்புலத்தில் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து பகிர்ந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 
அத்துடன், சீனாவின் ஏவுகணைகளை வைத்து இந்தியாவை தாக்க முயன்ற பாகிஸ்தானால் சிறிய சேதத்தை கூட ஏற்படுத்த முடியாத நிலை, இரு நாடுகளுக்கும் பெரும் அவமானமாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்