வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (09:39 IST)
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார்.
நம் நாட்டின் முன்னாள் பிரதமரான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை 5.05 மணிக்கு காலமானார். வாஜ்பாய் பல்வேறு அற்புதமான திறமைகளைக் கொண்டவர்
 
வாஜ்பாய் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
 
தற்பொழுது வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் விஜய்காட் பகுதியில் மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.  
 
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வாஜ்பாய் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்