சிவசேனாவுக்கான ஆதரவை இன்னும் முடிவு செய்யவில்லை..

Arun Prasath
திங்கள், 11 நவம்பர் 2019 (20:01 IST)
சிவசேனாவுக்கான ஆதரவை இன்னும் முடிவு செய்யவிலை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் பாஜவிற்கும் சிவசேனாவிற்கும் யார் ஆட்சி அமைப்பது என்பது பற்றிய இழுபறி நடைபெற்று கொண்டிருந்த நிலையில், ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் போதிய ஆதரவு இல்லை என்பதால் பாஜக நிராகரித்தது.

இதனை தொடர்ந்து சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்பு சிவசேனா ஆட்சியமைக்க சோனியா காந்தி கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை தர இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் தற்போது சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணு கோபால் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்