எங்களுக்குதான் துணை முதல்வர் பதவி! – குட்டையை குழப்பும் காங்கிரஸ்!

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (09:14 IST)
ஏகப்பட்ட பிரச்சினைகள் முடிந்து மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைத்துள்ள நிலையில் துணை முதல்வர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து சிவசேனா மகாராஷ்டிரத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றுள்ளார். துணை முதல்வர் பதவி தேசியவாத காங்கிரஸுக்கும், சபாநாயகர் பதவி காங்கிரஸுக்கும் வழங்க பேச்சுவார்த்தையில் முடிவானதாக அஜித்பவார் தெரிவித்தார்.

ஆனால் தற்போது காங்கிரஸ் துணை முதல்வர் பதவிக்கு விருப்பப்படுவதாக தெரிகிறது. இதற்காக சபாநாயகர் பதவியை தேசியவாத காங்கிரஸுக்கு அளிக்கவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இல்லையென்றால் இரு கட்சிகளில் இருந்தும் ஒவ்வொருவரை தேர்ந்தெடுத்து இரு துணை முதல்வர் பதவிகளை வழங்கவேண்டும் என கேட்க இருக்கிறார்களாம்.

இதனால் மறுபடியும் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு விடுமோ என சிவசேனா கட்சியினர் பதட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்