ஸ்வெட்டர்னு பில்டப் கொடுத்து கோணிப்பைய கட்டி விட்டு... பாவம்யா அந்த மாடு!!

வெள்ளி, 29 நவம்பர் 2019 (11:11 IST)
மாடுகளுக்கு ஸ்வெட்டர் சாரி கோணிப்பையை போர்த்தி விட்டு அழகு பார்த்துள்ளனர் உத்திரபிரதேச மாநில அரசு தரப்பினர். 
 
குளிர் காலம் வருவதையொட்டி அயோத்தியில் உள்ள மாடுகளுக்கு சணலால் உருவாக்கப்படும் கோட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் முதல் திட்டமாக பைசாங்பூரில் உள்ள 1,200 பண்ணைகளுக்கு 700 எருமைகளும் உட்பட வருகிற நவம்பர் மாத இறுதிக்குள் தயாராகிவிடும் என அயோத்தி மாநகராட்சி அறிவித்துள்ளது.
 
மேலும் அதன் பிறகு பசுக்களுக்கும், கன்றுக்குட்டிகளுக்கும் தயாரிக்கும் பணி நடைபெற்றுவருவதாகவும், இதன் ஒரு கோட் தயாரிக்க ரூ.250 முதல் 300 வரை செலவாகும் என நகர் நிகாம் கமிஷனர் நிராஜ் சுக்லா தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியான நிலையில், கோணிப்பைகளை ஒன்றாக் தைத்து அதனை மாடுகளின் மேன் போர்த்திவிட்டுள்ளனர். 
இதன் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ள நிலையில், இது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. உத்திரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து மாடுகள் மீது அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்