4 ஆண்டுகளுக்கு பயன்படுத்திவிட்டு வெளியே அனுப்புவது கொடுமை: அக்னிபாத் குறித்து காங்கிரஸ்

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (21:22 IST)
நான்கு ஆண்டுகளுக்கு இளைஞர்களை பயன்படுத்தி விட்டு அவர்களை வெளியே அனுப்புவது கொடுமையானது என அக்னிபாத் குறித்து கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டிகே சிவகுமார் பேட்டி அளித்துள்ளார்
 
17 வயது இளம் இளைஞர்களை நான்கு ஆண்டுகளுக்கு வீரர்களாக பயன்படுத்திக் கொண்டு வெளியே அனுப்புவது ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அவமானம் என்று தெரிவித்தார்
 
மேலும் அதை நியாயப்படுத்தும் பாஜக அமைச்சர்கள் தங்களது குழந்தைகளை இராணுவத்தில் சேர்ப்பார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இந்த கேள்விக்கு பாஜக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்