குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்..

Arun Prasath
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (14:44 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மாணவ அமைப்புகள் தீவிரமாக போராட்டி வருகின்றனர்.

ஆங்காங்கே போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் வன்முறைகளும் வெடித்தன. சில இடங்களில் உயிரிழப்புகளும் நேர்ந்தன.இந்நிலையில் கேரளா சட்டப்பேரவையில், “குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. சம உரிமையை பறிக்கிறது இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்து மதச்சார்பின்மையை மத்திய அரசு நிலைநாட்ட வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்