ஓகே சொன்ன அஜித் வில்லன், முடியாது என்று கூறிய அஜித் நாயகி!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (19:44 IST)
ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாலிவுட் பிரபலங்கள் அரசியல் கட்சிகளிடம் பணம் பெற்று அவர்களுக்கு ஆதரவாக டுவீட் போட ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது
 
இதுகுறித்து ஆபரேசன் கரோகி என்ற பெயரில் கோப்ராபோஸ்ட் என்ற ஊடகம் பாலிவுட் பிரபலங்களிடம் பி.ஆர்.ஓ போல் வேடமிட்டு, மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக டுவீட் போடவேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு அந்த பாலிவுட் பிரபலங்கல் ரூ.2 லட்சம் முதல் ரூ.20 கோடி வரை பேரம் பேசியது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது
 
இந்த ஆபரேசனில் சிக்கிய முக்கிய நடிகர்களில் ஒருவர் விவேக் ஓபராய். அஜித் நடித்த 'விவேகம்' படத்தில் வில்லனாக நடித்த இவர் தன்னுடைய ஒரு டுவீட் எத்தனை பேரை சென்றடையும் என கணக்கு போட்டு அதற்கேற்ப பேரம் பேசியுள்ளதாக கோப்ராபோஸ்ட் அறிவித்துள்ளது. அதேபோல் எத்தனை கோடி கொடுத்தாலும் இதுபோன்ற செயல்களில் தாங்கள் ஈடுபட மாட்டோம் என நடிகை வித்யாபாலன் கூறியுள்ளாராம். இவர் தல 59 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பேரத்தில் ஜாக்கி ஷெராஃப், விவேக் ஓபராய், சன்னி லியோன், அமீஷா படேல், பூனம் பாண்டே உட்பட 30-க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரபலங்கள் சிக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்