இந்திய அணி வெற்றியை கொண்டாடியதில் மோதல்.. வாகனங்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு..!

Mahendran
திங்கள், 10 மார்ச் 2025 (11:11 IST)
இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றதை மத்திய பிரதேசத்தில் கொண்டாடிய நிலையில், இரு பிரிவினர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
நேற்று நடந்த சாம்பியன் ஸ்டாப் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், இந்திய அணி அபாரமாக விளையாடி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். குறிப்பாக, சென்னை மெரினாவில் பல மணி நேரம் கொண்டாட்டம் நடைபெற்றது.
 
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் ஜும்மா மசூதி அருகே கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றியை கொண்டாட பேரணியாக சென்றபோது, திடீரென அவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அங்கிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனை அடுத்து, ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், தற்போது அங்கு பதற்ற நிலை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்ததால் தான் இந்த கலவரம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்