இந்தியாவிற்கு எதிராக தீவிர பயிற்சியில் பாகிஸ்தான்! – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (11:20 IST)
இந்தியாவின் படைபலத்தை எதிர்க்கும் அளவிற்கு பாகிஸ்தானும் ஆயுதங்களை அதிகரித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, காஷ்மீர் தொடர்பான பிரச்சினை நிலவி வரும் நிலையில் அடிக்கடி எல்லைகளில் தாக்குதல், மோதல் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2019ம் ஆண்டில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையேயான உறவுநிலை மோசமடைந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க உளவுத்துறை அதிகாரி லெப்டினெண்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் “இந்தியாவின் அணு ஆயுதங்கள், ராணுவ பலத்தை பார்த்து பாகிஸ்தான் தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமானதாக கருதுகிறது. இந்தியாவுக்கு போட்டியாக தங்கள் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் பாகிஸ்தான், அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்