குழந்தையை உயிரோடு புதைத்த மர்ம நபர்: போலீசார் தீவிர விசாரணை

Webdunia
சனி, 23 ஜூலை 2016 (16:32 IST)
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே தாரியா என்ற கிராமத்தில் வீட்டி தூங்கிக்கொண்டிருந்த குழைந்தையை யாரோ மர்ம நபர் கடத்திக்கொண்டு போய் உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
வினோத் சிங் பாகல் தனது குழந்தை தானு உடன் வீட்டின் வராண்டாவில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென நள்ளிரவில் எழும்பி பார்க்கையில் குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கிராம மக்களின் உதவியுடன் விடிய விடிய தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
 
இதனையடுத்து இன்று காலை ஊருக்கு வெளியே உள்ள ஒரு வயல்வெளியில் மாடு மேய்க்க சென்ற ஒருவர் அங்கு குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டிருப்பதை பார்த்து குழந்தையின் தந்தைக்கு தகவல் அளித்தார்.
 
தலை மற்றும் கால் வெளியே தெரியுமாறு குழந்தை புதைக்கப்பட்டிருந்தது. மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை மீட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குழந்தையின் தந்தை வினோத் சிங் பாகல் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி யார் என்பதை அறிய அந்த கிராம மக்களும் ஆவலுடன் இருக்கின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்