திருச்சி எஸ்பியின் தலை சிதறும்.. இன்ஸ்டாவில் போஸ்ட் போட்ட 16 வயது சிறுவர்கள்..!

Siva

வியாழன், 13 ஜூன் 2024 (13:17 IST)
திருச்சி எஸ்பியின் தலை சிதறும் என இன்ஸ்டாவில் போஸ்ட் போட்ட 16 வயது சிறுவர்கள் கண்டிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

திருச்சியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்பவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நிலையில் இது தொடர்பாக கொம்பன் ஜெகன் டீம் என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து திருச்சி எஸ் பி வருண்குமார் புகைப்படத்தை பகிர்ந்து விரைவில் தலைகள் சிதறும் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்ததில் இந்த போஸ்ட்டை 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் தான் பதிவு செய்தது என தெரியவந்தது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட சிறுவர்களை அழைத்து விசாரணை செய்ததில் தென்காசியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து இந்த போஸ்ட்டை பதிவு செய்தவர்கள் சிறுவர்கள் என்பதால் அவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் அறிவுரை மற்றும் எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டனர். மேலும் தென்காசியை சேர்ந்த 17 வயது சிறுவன் தலைமறைவாகியுள்ளதை அடுத்து அந்த சிறுவனை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி எஸ்பி வருண்குமார் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்