அவர்கள் இன்போசிஸ் என்பதற்காக எல்லாம் தெரிந்தவர்களா? நாராயண மூர்த்திக்கு சித்தராமையா கண்டனம்..!

Siva

வெள்ளி, 17 அக்டோபர் 2025 (16:23 IST)
கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுப்பு தெரிவித்த இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோருக்கு முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கணக்கெடுப்பு அல்ல, முழு மக்கள் தொகைக்குமானது. இன்போசிஸ் என்பதாலேயே அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் ஆகிவிட மாட்டார்கள். அவர்களுக்கு இது புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?
 
அரசின் 'சக்தி', 'கிரஹ லட்சுமி' போன்ற நலத்திட்டங்கள் சாதி எல்லைகளை கடந்து உயர் சாதியினரையும் சென்றடைகிறது’ என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்,.
 
முன்னதாக தங்கள் வீட்டில் கணக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்று நாராயண மூர்த்தி தம்பதி மறுப்பு தெரிவித்தனர். தாங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சாராதவர்கள் என்பதால், இந்த அரசு பணி தங்களுக்கு பொருந்தாது என்று சுதா மூர்த்தி படிவத்தில் கையெழுத்திட்டு மறுத்துள்ளார்.
 
இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை என்று  உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்