ஆம்ஸ்ட்ராங் காலைதான் வெச்சார்.. ஆனா இந்தியா வேற லெவல்..! – சந்திரயான் 3-ல் இஸ்ரோ செய்த சம்பவம்!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (10:51 IST)
இன்று நிலாவுக்கு புறப்படும் இஸ்ரோவின் சந்திரயான் 3-ல் இஸ்ரோ ஒரு சிறப்பான விஷயத்தை செய்துள்ளது.



இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு விண்கலம் அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ளும் சந்திரயான் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முன்னதாக சந்திரயான் 1 மற்றும் 2 விண்கலங்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டன.

இதில் சந்திரயான் 2 நிலவில் இறங்க இருந்த சில வினாடிகளுக்கு முன்பாக தொடர்பை இழந்தது. இந்நிலையில் இன்று நிலவுக்கு அனுப்பப்பட உள்ள சந்திரயான் 3 பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திரயான் 3 விண்கலத்தில் இஸ்ரோ ஒரு சிறப்பான விஷயத்தை செய்துள்ளது.

நிலவில் இறங்க உள்ள ப்ரக்யான் ரோவரின் சக்கரத்தில் இந்திய அரசின் முத்திரையையும், இஸ்ரோவின் முத்திரையையும் எம்போஸ் செய்துள்ளனர். இதனால் ப்ரக்யான் நிலவில் இறங்கி நகர தொடங்கியதும் இந்திய அரசின் சின்னமும், இஸ்ரோவின் சின்னமும் நிலவின் தரையில் பதியும். இதன் மூலம் முதல்முறையாக நிலாவில் தனது முத்திரையை பதிக்க உள்ளது இந்தியா.



இதுவரை எந்த நாட்டின் விண்கலங்களும் பயணம் செய்யாத நிலவின் தென் பகுதியை நோக்கி சந்திரயான் 3 தனது பயணத்தை தொடர்கிறது. அங்கு தண்ணீர் குறித்த ஆய்வை சந்திரயான் 3 மேற்கொள்ள உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்