5வது சுற்றை வெற்றிகரமாக தொடங்கியது சந்திரயான்-3 விண்கலம்: ஆகஸ்ட் 1 முதல் அடுத்த கட்டம்..!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (15:25 IST)
சந்திரயான் - 3 விண்கலம் 5வது சுற்றை வெற்றிகரமாக தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது,.
 
சந்திரயான் - 3 விண்கலம்   கடந்த 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட நிலையில் அது நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. 
 
இந்த நிலையில் சந்திரயான் - 3 விண்கலம்  ஏற்கனவே நான்கு சுற்று பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தற்போது ஐந்தாவது சுற்றில் பயணத்தை தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 
மேலும் சந்திரயான் - 3 விண்கலம் பூமிக்கு அருகே 236 கி.மீ. தூரத்திலும், பூமிக்கு அப்பால் 1,27,609 கி.மீ. தூரத்திலும் சுற்றி வருகிறது
 
வரும் ஆகஸ்ட் 1 முதல் புவியில் இருந்து சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்கு மாற்ற உந்துவிசை அளிக்கப்பட உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்