பிற நாடுகளிலிருந்து நுழையும் புதிய கொரோனா வைரஸ்? – மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:15 IST)
உலக நாடுகள் சிலவற்றிலிருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால் அந்த நாட்டிலிருந்து வருபவர்களை பரிசோதிக்க மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரொனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சில நாடுகளில் கொரோனா வைரஸின் வீரியமடைந்த புதிய வகை வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளில் கொரொனாவின் வீரியமடைந்த வகையான பி.1.1.529 என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா குறைந்துள்ளதால் வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த புதிய வைரஸ் பரவல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய சுகாதாரத்துறை, வீரியமிக்க வைரஸ் பரவி வரும் மேற்கண்ட நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களை மிக தீவிரமாக கண்காணித்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்