நேதாஜியின் 125 ஆவது பிறந்தநாள் – ஆண்டுதோறும் கொண்டாடும் மத்திய அரசு!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:08 IST)
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளான ஜனவரி 23 ஆம் தேதியை ஆண்டுதோறும் கொண்டாட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து துல்லியமான தகவல்கள் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் வரும் ஜனவரி 23 ஆம் தேதி அவரின் 125 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மத்திய அரசு அவரைக் கௌரவிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனிமேல் ஆண்டுதோறும் ஜனவரி 23 ஆம் தேதியை பறக்ரம் திவாஸ் (தைரிய நாள்) என்று கொண்டாட உள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 23 ஆம் தேதி பிரதமர் மோடி மேற்கு வங்கத்துக்கு சென்று நேதாஜியின் நினைவகத்துக்கு செல்ல உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்