இந்தியாவில் முக்கியமான ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ரயில்வே நிலையங்களில் நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் இலவச வைஃபை சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல கடந்த 2019ம் ஆண்டிலிருந்து சிறப்பு ரயில்கள் சிலவற்றிலும் இலவச வைஃபை சேவை வழங்குவதாக ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
இதுவரை சில சிறப்பு ரயில்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்பட்டு வந்தாலும் செலவினங்கள் கட்டுப்படியாகததால் இனி ரயில்களில் இலவச வைஃபை சேவைகள் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.