பாப்புலர் பிரண்ட் அமைப்பு தடை செய்யப்படுகிறதா?- மத்திய அரசு தீவிர ஆலோசனை

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (16:40 IST)
பாப்புலர் பிரண்ட் அமைப்பு தடை செய்யப்படுகிறதா?- மத்திய அரசு தீவிர ஆலோசனை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்ய மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு 15 மாநிலங்களில் உள்ளது. இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை அதிரடியாக கடந்த இரண்டு நாட்களில் நடத்திய சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்களில் 11 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த சோதனையின் போது கிடைத்த ஏராளமான ஆவணங்கள் செல்போன்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அடுத்த கட்டமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
கடந்த 10 ஆண்டுகளாக இந்த அமைப்பு சட்ட விரோத செயல்களை செய்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்