ஆக்ஸிஜனை எங்ககிட்ட தாங்க.. நாங்க பிரிச்சு தறோம்! – ஸ்டெர்லைட் ஆக்ஸிஜனை கேட்கும் மத்திய அரசு!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (11:44 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தடுப்பாட்டால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் மத்திய அரசிடம் வழங்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் மூலமாக மாநில அரசுகளுக்கு அவை பிரித்து தரப்படும் என்றும், முன்னதாக ஆக்ஸிஜன் ஒதுக்குவதை மத்திய அரசு மேற்கொள்ள உத்தரவு ஒன்று உள்ளதையும் சுட்டி காட்டி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்