கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர்: மத்திய அரசு தகவல்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (07:11 IST)
தமிழகத்தில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
இதுவரை 18 மாநிலங்களில் 5,424 பேர் கருப்பு பூஜையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கருப்பு பூஞ்சை நோய்க்கு அளிக்கப்படும் Amphotericin B என்ற மருந்து குப்பிகள் சுமார் 3 லட்சம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 50,000 குப்பிகள் இந்தியாவுக்கு வந்து விட்டதாகவும் அந்த குப்பிகள் தற்போது அனைத்து மாநிலங்களும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருக்கும் 5,424 நோயாளிகளில் 4558 பேகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் அவர்களில் 55 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 
அதிகபட்சமாக குஜராத்தில் 2,165 போ், மகாராஷ்டிரத்தில் 1,188 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். உத்தர பிரதேசத்தில் 663 போ், மத்திய பிரதேசத்தில் 590 போ், ஹரியாணாவில் 339 போ், ஆந்திரத்தில் 248 போ் கருப்பு பூஞ்சையால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்