இந்திய ஒருமைப்பாட்டை குலைக்கும் யூட்யூப் சேனல்கள்! – தடை செய்த மத்திய அரசு!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (15:43 IST)
இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை குலைக்கும் விதமாக செயல்பட்ட யூட்யூப் சேனல்களை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு யூட்யூப் சேனல்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் இந்திய இறையாண்மை மற்றும் சமூக அமைதியை குலைக்கும் விதமான கருத்துகளை வெளியிடும் சேனல்களை கண்டறிந்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 35 யூட்யூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியது. மேலும் உளவுத்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் நாட்டிற்கு எதிராக போலி கருத்துகள், வெறுப்பு பேச்சுகளை வெளியிட்ட சமூக வலைதள கணக்குகள், இணைய செய்தி தளங்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது தேசிய பாதுகாப்பு குறித்த தவறான தகவல்களை பரப்பி வந்த 22 யூட்யூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. இதில் 18 சேனல்கள் இந்தியாவில் இருந்தும், 4 சேனல்கள் பாகிஸ்தானில் இருந்தும் இயங்கி வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர 3 டுவிட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளமும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்