இந்திய அரசியலில் வரலாறு படைக்கும் காவிரி பிரச்சனை! எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா?

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (13:54 IST)
உச்சநீதிமன்றம், காவிரியிலிருந்து வரும் 27ம் தேதிவரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டுள்ளது.


 
இதை அடுத்து, இதுகுறித்து, இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவையை கூட்டி விவாதித்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. மேலும், மாலை 6 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தையும் சித்தாரமையா கூட்டியுள்ளார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காவிரி நீர் விவகாரத்தில், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தங்கள் மக்கள் பிரதிநிதிகளை ராஜினாமா செய்ய வைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அக்கட்சியை சேர்ந்த, மண்டியா லோக்சபா தொகுதி எம்.பி புட்டராஜு தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, தன் ராஜினாமா கடிதத்தை மண்டியா மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். மேலும், அக்கட்சியின் ஹாசன் தொகுதி எம்.பி. தேவகவுடாவும் காவிரி விவகாரத்தில் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், காவிரி நீர் விவகாரத்தில், தேசத்தின் கவனத்தை ஈர்க்க, அக்கட்சியில் உள்ள 40 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்