சென்னையில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் மாஞ்சா கயிறு மூலம் பட்டம் விட்டுக் கொண்டிருந்த நிலையில், இரண்டரை வயது குழந்தை படுகாயம் அடைந்ததை அடுத்து நால்வரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தனது குழந்தையுடன் வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாஞ்சா நூல் அறுத்து 2 1/2 வயது குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், குழந்தைக்கு ஏழு தையல் போடப்பட்டு உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இது குறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மாஞ்சா நூலில் பட்டம் விட்ட கல்லூரி மாணவர் மற்றும் பள்ளி மாணவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், அவர்களிடமிருந்து பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல்களை போலீசார் பறிமுதல் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.