தமிழுக்கு பதிலாக பிரெஞ்ச் மொழி படிக்கிறேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் மகன் பேட்டி..!

Mahendran

திங்கள், 18 நவம்பர் 2024 (10:13 IST)
தமிழ் தமிழ் என்று சொல்லும் திமுக அமைச்சரின் மகன் தமிழ் மொழியில் படிக்காமல் பிரெஞ்சு மொழி படிப்பதாக கூறி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மகன் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பாராட்டு சான்றிதழை பெற்றார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த சான்றிதழை வழங்கி தனது இரண்டாவது மகன் கவின் நண்பர்களுடன் சேர்ந்து இந்த சான்றிதழை பெற்றது ஒரு தந்தையாக நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் மகன் கவின் செய்தியாளர்களிடம் பேசிய போது, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஐ சி எஸ் சி என்ற பள்ளியில் நான் படித்து வருகிறேன். எனக்கு கணித பாடம் மிகவும் எளிது. தமிழை நான் மொழிப்பாடமாக எடுக்கவில்லை. அதற்கு பதிலாக பிரெஞ்சு பாடத்தை தான் மொழிப்பாடமாக எடுத்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.

தமிழை காப்பதாகவும் தமிழை வளர்ப்பதாகவும் திமுக அரசு கூறிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த அரசின் அமைச்சரின் மகனே தமிழை தவிர்த்து அதற்கு பதிலாக பிரெஞ்சு மொழி படிக்கிறேன் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்