போலி எண்கவுண்டர் தொடர்பாக போலீஸார் மீது வழக்குப்பதிவு

Webdunia
சனி, 21 மே 2022 (23:59 IST)
தெலுங்கானா மாநிலத்தில் போலி எண்கவுண்டர் தொடர்பாக போலீஸார் மீது வழக்குப்பதிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் அருகே சத்தனப்பள்ளி டோல்கேட் அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய   4 பேரை காவல்துறையினர் எண்கவுண்டர் செய்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த எண்கவுண்டர் தொடர்பாக  நீதிபதி வி.எஸ்.  சிர்புகர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையம் விசாரித்த பின், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், போலியான எண்கவுண்டர் நடத்தி 4 குற்றவாளிகளும் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவுப் பதிவு செய்ய ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்