பி.எஸ்.என்.எல் 4ஜி, 5ஜி சேவை எப்போது? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்..!

Webdunia
வியாழன், 25 மே 2023 (14:43 IST)
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி மற்றும் 5ஜி சேவை கிடைப்பது எப்போது என்ற தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 
 
தனியார் தொலைதொடர்பு நிறுவங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவை தற்போது 5ஜி சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. 
 
ஆனால் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இன்னும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியாவில் அடுத்த இரண்டு வாரங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை 200 இடங்களில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிஎஸ்என்எல் 5ஜி சேவையும் அறிமுகப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்