தாவூத் இப்ராஹிம் சகோதரர் மும்பையில் கைது

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (23:40 IST)
மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிமை பிடிக்க கடந்த பல ஆண்டுகளாக இந்திய அரசு முயற்சித்து வரும் நிலையில் அவருடைய இளைய சகோதரர் இக்பால் காஸ்கர் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார்.



 
 
மும்பையில் உள்ள ஒரு வீட்டில் இக்பால் இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து பிரபல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ப்ரதீப் ஷர்மா தலைமையில் சென்ற தானே போலீசார் இக்பாலை கைது செய்தனர்.
 
ஏற்கனவே அவர் மீது தொடரப்பட்டிருந்த பல வழக்குகளின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது தானே போலீசார் கஸ்டடி எடுத்து அவரை விசாரணை செய்ய முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்