உத்தரப்பிரதேச மணகளின் கல்வித் தகுதியை சோதித்த மணமகன், தனக்கு நடந்த சோதனையில் தோல்வி அடைந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்பூரி கிராமத்தில் திருமணம் நிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்றது. மணமகன் +2 வரை படித்தவர். மணமகள் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர். இந்நிலையில் மணமகன், மணமகளுக்கு எழுத படிக்க தெரியுமா என சின்ன டெஸ்ட் வைத்துள்ளார்.
அதில் மணமகள் நூறு மதிப்பு பெற்றுள்ளார். உடனே மணமகள் தானும் மணமகணுக்கு டெஸ்ட் வைக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகன் தேர்வுக்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், மணகமன் தேர்வில் பூஜ்ஜியம் எடுத்துள்ளார்.