குரங்கை பளார் என அறைந்த வாலிபர் - அதிர்ச்சி வீடியோ

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (12:07 IST)
உணவு தருவது போல் ஏமாற்றி ஒரு குரங்கை வாலிபர் ஒருவர் அறையும் வீடியோ ஒன்று வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


 
 
ராஜஸ்தான் மாநிலம் மண்டோர் பூங்கா எனும் பகுதியில் ஏராளமான குரங்குகள் வசிக்கிறது. அது சுற்றுலா பயணிகள் ஏராளமனோர் வந்து செல்லும் ஒரு பகுதியாகும். 
 
இந்நிலையில், அங்கு சென்ற ஒரு வாலிபர் ஒருவர் அங்கிருக்கும் குரங்கு ஒன்றுக்கு, தன்னுடை கையில் உணவு தருவது போல் காட்டி, அதை எடுத்து உண்ண வரும் குரங்கின் கன்னத்தில் பளார் என அறையும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.  மிரட்சியுடன் குரங்கு அவரை பார்ப்பதும் அதில் பதிவாகியுள்ளது.
 
விளம்பரத்திற்காகவும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும் சில வாலிபர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது என ஏராளமனோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். விலங்குகள் நல ஆர்வலர்களும் இதை கண்டித்துள்ளனர்.

அடுத்த கட்டுரையில்