இந்த நிலையில், சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடம் சுமார் 370 கோடி ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இடம் வரைபடம் மூலம் தெரியவந்துள்ளதாகவும், கரடுமுரடான பகுதி, சமவெளி பகுதி மற்றும் ஓரளவு சமவெளியாக உள்ள பகுதி என மூன்று தன்மைகள் கொண்ட நிலப்பரப்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 370 கோடி ஆண்டுகளுக்கு பழமையானது என்பது உறுதியாக தெரியவந்துள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.