அந்நிலையில், சமீனாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை அறிந்த அயூப் அவரை உஸ்மானிய மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து விட்டு சென்று விட்டார். உதவிக்கு யாருமில்லாத நிலையில், திடீரெனெ ஏற்பட்ட நெஞ்சுவலியில் சமீனா இறந்துவிட்டார்.
ஆனால், தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவரின் 5 வயது மகன், அவரின் அருகிலேயே 2 மணி நேரம் தூங்கிக் கொண்டிருந்தான். இதை பார்ப்பவரின் மனதை உருக்கியது. அதன்பின், அவரது தாயை வேறு ஒரு அறைக்கு மாற்றுவதாக கூறி அங்கிருந்த செவிலியர்கள், சமீனாவின் உடலை பிரதே பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றனர். அதன் பின் அந்த சிறுவனை சமீனாவின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.