வீடியோ கேம் விளையாட்டில் வருவது போன்று தனது தாய் மற்றும் தங்கையை கொன்றுவிட்டு வீட்டில் இருந்த பணத்தை திருடி சென்ற சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நொய்டாவை சேர்ந்த சவுமியா அகவர்வால் என்பவர், வேலை காரணமாக 3 ஆம் தேதி குஜராத் சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பியபோது, வீட்டில் அவரது மனைவி அஞ்சலியும் மகள் மணிகர்னிகாவும் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர்.
மேலும், வீட்டில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு, தனது 15 வயது மகன் பிராகரையும் காணவில்லை என போலீஸில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.
அதில், கொலைக்கு முந்தைய நாள், சிறுவன் வீட்டினுள் சென்றதையும் பின்பு வெளியே சென்றதும் பதிவாகியிருந்தது. அதேசமயம் வீட்டு பாத்ரூமில் இரத்தம் கரை படிந்த சிறுவனின் ஆடையும் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் காணாமல் போன் பிரபாகரை கண்டுபிடித்து போலீஸார் கைது செய்தனர். இதுவரை நடந்த விசாரணையில், தினமும் தாய் திட்டி வந்ததாகவும், மொபைல் போனில், ஆக்ரோஷமான வீடியோ கேம் ஒன்றை தொடர்ந்து விளையாடி வந்ததால், அதே போன்று கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.