சேலம் உடையப்பக் காலனி ராம்நகரைச் சேர்ந்த சக்திவேல்-விஜி ஆகியோரின் மகள் கவிஶ்ரீ. சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ்- ரெஜினாமேரி ஆகியோரின் மகள் ஜெயராணி. கவிஶ்ரீயும் ஜெயராணியும் சேலம் நான்கு ரோட்டில் உள்ள செயிண்ட் மேரீஸ் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் நெருக்கமான தோழிகள் என்பதால் வகுப்பறையில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பார்கள்.
இதனால் மனமுடைந்த மாணவிகள் இருவரும் சேலம் சரவண பவன் ஹோட்டல் அருகேயுள்ள அப்சரா விடுதியின் 4-வது மாடி மீது ஏறி, சாமி கும்பிட்டுவிட்டு கைகளைக் கோர்த்தவாறு மேலிருந்து குதித்தனர். இதில், ஜெயராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவிஶ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் சாவிற்கு வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.