பாஜக பிரமுகர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம்

செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (09:52 IST)
பீகாரில் பாஜக பிரமுகர் ஒருவர் பள்ளி மாணவர்கள் மீது தனது காரை ஏற்றிக் கொன்றதால், அவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் தர்மபுரா பகுதியில்  கடந்த 24-ம் தேதி பாஜக பிரமுகர் ஓட்டி வந்த கார், தாறுமாறாக ஓடி பள்ளிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 9 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மீது கார் ஏற்றிக் கொன்ற விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் மனோஜ் பைதா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.
 
காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பா.ஜ.க. பிரமுகர் மனோஜ் பைதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்