மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். மேலும், அவர் மேடையில் பேசும் போது, மக்களுக்கு ஸ்கூட்டர், குவாட்டர் கொடுக்க மாட்டோம். மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கி தரும்படியாக அவர்களின் பொருளாதார நிலையை மாற்றுவோம் என வாக்குறுதி அளித்தார்.
இந்நிலையில், பாஜக நபரும், தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பாக பங்கேற்கும் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில்,“குவாட்டர், ஸ்கூட்டர் கிடையாது! மேட்டர்?” என கொச்சையாக கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, நெட்டிசன்கள் அவரை ஏகத்துக்கும் விமர்சித்து வச்சு செய்து வருகின்றனர்.