அரசியலில் பிரபாஸ்... அதுவும் பாஜகவுக்கு ஆதரவாகவா...?

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (18:36 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. பெரும்பாலும் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
அந்த வகையில் ஆந்திராவில் நடிகர் பிரபாஸ் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் களமிறங்கவுள்ளதாக ஆந்திர அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
 
அதாவது, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தராத காரணத்தால் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகியது. அதன் பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு மோடி அரசை கடுமையாக விமர்சிக்க துவங்கினார். 
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை எப்படியேனும் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. எனவே, அங்கு பிரபலமான நடிகரான பிரபாஸை தங்கள் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்ய பாஜக முயற்சித்து வருகிறதாம். 
 
இதற்காக பிரபாஸின் மாமாவும், மூத்த நடிகருமான கிருஷ்ணாம் ராஜூவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அப்படி இந்த பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்தால் பிரபாஸ் ஆந்திராவின் ஒரு மக்களவை தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்