ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் சந்திரபாபுநாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய இரண்டு கட்சிகளும் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று கொண்டு வந்துள்ளன. இதுகுறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த தீர்மானத்தின்மீது ஓட்டெட்டுப்பு நடந்தால் மோடியின் அரசு தப்பிக்குமா? என்பதை பார்ப்போம்
கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டியை கூட்டணி கட்சிகள் இன்றி தனியே பெற்றது. ஆனால் 2014க்கு பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்ததால் 8 தொகுதிகளை இழந்து தற்போது 274 எம்பிக்கள் உள்ளனர். ஆனாலும் சத்ருஹன் சின்ஹா உள்பட ஒருசில எம்பிக்கள் மோடிக்கு எதிராக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்பதால் மெஜாரிட்டிக்கு 272 எம்பிக்கள் தேவை. எனவே பாஜக எம்பிக்கள் அனைவரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தாலே தீர்மானம் தோல்வி அடைந்துவிடும்
மேலும் பாஜகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவு, அதிமுக உள்பட கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவு ஆகியவற்றை கணக்கிட்டு பார்த்தால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கூற்றாக உள்ளது.