மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்; தமிழகத்தை தொடர்ந்து ஆந்திரா அதிரடி முடிவு

வெள்ளி, 16 மார்ச் 2018 (10:33 IST)
பாஜக அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது.

 
தமிழக சட்டசபையில் நேற்று காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
 
ஆனால் மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் தெலுங்குதேசம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. மேலும் மோடி அரசுக்கு எதிராக ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் இன்று நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டு வர உள்ளது.
 
இதற்கு மக்களவையில் ஆதரவு தெரிவிப்போம் என்று தெலுங்குதேசம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்