யமுனை நதியில் பாஜக நச்சு கலப்பதாக முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜரிவால் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் யமுனை நதியில் ஹரியானா மாநில பாஜக அரசு நச்சு கலப்பதாக திடீரென குற்றம் சாட்டினார்.
இது குறித்து பாஜக நிர்வாகிகள் தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில், தேர்தல் கமிஷன் அவருடைய கருத்துக்கு உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய குற்றச்சாட்டுகள் இரு மாநிலங்களுக்கும் இடையேயான உறவை பாதிக்கக்கூடும். அதேசமயம், இது சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் எனவும் தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ளது. எனவே, புகார் கூறிய ஆதாரங்களை உடனடியாக கெஜ்ரிவால் வழங்க வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரவிந்த் கெஜ்ரிவால் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.